Saturday, June 21, 2008

சாலை விதிகளை நாம் ஏன் மதிப்பதில்லை?


இன்று காலையில் ஒரு செய்தி படிச்சேன். நம்ம கிழக்கு கடற்கரை சாலையிலே நடந்த ஒரு விபத்துல ஒரு பெரிய கம்பனியோட அதிகாரி (Tata motors CEO)அவரோட குடும்பத்தோட காலமாகிட்டாரு. எதிர் திசையில் தவறான வழியில் வந்த ஒரு கார் தான் யமனாக மாறி இருக்கிறது. நானும் ரொம்ப காலமா ஒரு விசயத்த கவனிச்சிகிட்டேதான் இருக்கிறேன். அப்படி எங்க தான் அவ்வளவு வேகமா போவானுங்களோ. ஒரு காலத்துல நம்ம NH45 சாலையில தான் நிறைய விபத்து நடக்கும். அதுவும் நேருக்கு நேரா மோதிக்குவானுங்க. அதுக்கு ஒரு காரணமும் சொல்லுவானுங்க, அதாவது நடுவுல தடுப்பு சுவர் இல்லாதது தான் இவ்வளவு விபத்துகளும் நடக்குறதுக்கு காரணம் அப்படியென்று. ஆனால் என்ன நடந்துச்சு தெரியுமா? முந்தியெல்லாம் நேருக்கு நேரா மோதினவனுங்க இப்ப என்ன செய்யிறானுங்க தெரியுமா? பின்னால கொண்டு போய் மோதுரானுங்க. அதாவது முந்தியெல்லாம் வலது பக்கமா முந்திக்கிட்டு போனவனுங்க எல்லாம் எப்ப இடது பக்கமா போறானுங்க இதனால என்ன நடக்குதுண்னா, இடது பக்கம் நம்ம அறிவாளிங்க அபாய விளக்குக்கூட போடாம நிறுத்தி வைத்து இருக்குற வண்டி மேல போய் மோதிக்கிட்டு நிக்கிறாணுங்க. அதிலையும் இந்த மஞ்சள் போர்ட் வண்டி ஓட்டுறவனுங்க பண்ணுற லோலாயி இருக்கே யம்மா தாங்க முடியாது. அவனுங்களுக்குனு ஒரு சட்டம், முறை எல்லாம் இருக்கு. இவனுங்க வண்டிஹைவேல மட்டும் இல்லாது எந்த பாதயில போனாலும் லைட் மட்டும் ஹை பீமில தான் எரியும். எதிர் பக்கம் வாரவன் எக்கேடு கேட்டாலும் இவனுக்கு கவலையில்ல. வளைவில் முந்தாதே அப்படின்னு அவன் வண்டியில எழுதியிருப்பான் ஆனால் அவன் வளைவுல தான் முந்துவான். ஒரு வேளை பின்னால எழுதியிருக்கிறதால அது பின்னால வர்ற வண்டிக்காரன் தான் பின்பற்றி நடக்கணும் அப்படி நினைக்கிறானோ என்னவோ தெரியல.அடுத்தது நம்ம ஊரு வாகன சாரதிகள் (drivers) 99% சதவிகிதம் எவரும் சாலை விதிகளை மதிப்பதே கிடையாது. அப்படி எவனாவது அதனை கடைப்பிடித்தால் அவனை ஏளனமாகப் பார்ப்பது அல்லது திட்டுவது இவர்களது வழக்கம். அநேகமான நேரங்களில் சிக்னல்களில் நிற்பது நம் உயிரோடு விளையாடுவது போன்றது. இரவு ஒன்பது மணிக்கு மேல் நீங்கள் சிக்னலில் நின்றால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம்கிடையாது. வண்டியைத் திருப்பும் பொழுது சிக்னல் போடுவது என்பது 99 சதவிகிதம் பேருக்கு என்னவென்றே தெரியாது. இதைப்பற்றி எத்தனையோ திரைப்படங்களில் கிண்டல் கேலி செய்தாலும் இவர்கள் புரிந்து கொள்ளுவதும் இல்லை. சிக்னல் பற்றி எழுதும் பொழுது தான் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. 1985 ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்தியாவில் தயார் ஆன இரு சக்கர வாகனங்களில் அதாவது புல்லட், ராஜ்தூட், பாஜாஜ் போன்றவற்றில் பக்க வாட்டு சிக்னல் விளக்குகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள்  கிடையாது என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும் (இருந்தால்கூட அதை மடக்கி வைத்துவிட்டுத்தான் வண்டியையே நாங்கள் எடுப்போம் என்பது வேறு விஷயம்). ஜப்பானிய தயாரிப்புகளாகிய ஹோண்டா, சுசுகி, யமஹா போன்ற வண்டிகள் நமது சந்தைக்கு வந்த பிறகு தான் நமது தயாரிப்பாளர்களுக்கு அது பற்றிய சிந்தனையே தோன்றியது. அது வரையிலும் கை சிக்னல் தான் பயன்பட்டது. ஒரு பட்டனைத் தட்டினாலே எறியக்கூடிய சிக்னல் இருக்கையிலேயே இவர்கள் அதனைப் பயன் படுத்தாத பொழுது இவர்கள் எவ்வாறு கை சிக்னலினைப் பயன் படுத்தியிருப்பார்கள்!ஆக நம்மவர்களுக்கு சிக்னல் என்பது எந்தக் காலத்திலும் ஒரு பொருட்டேயல்ல. 

அடுத்தது விட்டுக்கொடுத்து வண்டி ஓட்டுவது. 
பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனம் இல்லாமயே மிகப்பெரும் காரணமாக இருக்கிறது. ஓட்டுநர்களுக்கு ஒரு காலமும் நான்தான் பெரியவன் என்ற எண்ணம் இருக்கவே கூடாது. நம்மில் நிறைய பேரிடம் எது இல்லையோ இது மட்டும் உள்ளது.மேற் கூறிய விபத்து குடியினால் நேர்ந்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள அடுத்த தலைவலி.சக மனிதனை மனிதனாக மதிப்பவன் இவ்வாறு செய்வதற்கு நிச்சயமாக அஞ்சுவான். துரதிர்ஸ்டவசமாக மனிதனை மனிதனாக அல்ல ஒரு புழுவாகக்கூடத் தற்காலத்தில் அநேகர் மதிப்பதில்லை.